சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி மானாமதுரை ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள திடலில் "இந்த மண்ணிற்கு ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி" என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4 மணி அளவில் நகர தலைவர் முருகேசன் தலைமையிலும், மேற்கு நகர செயலாளர் செந்தில்குமார், கிழக்கு நகர செயலாளர் பிரபாகரன், கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணன், வடக்கு ஒன்றிய தலைவர் வினோத் கண்ணன், பொதுக்கூட்டத்தின் தொகுப்பாளர் பி. பிரபாகரன் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.
மேலும் இப்போது கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ஜெயசீலன் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பாசறை துணைச் செயலாளர் கார்த்திக்ராஜா ஆகியோர் சிறப்பு பேருரையாற்றினர். பொதுக்கூட்டத்தின் முடிவில் கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த பெ. ஹரிபிரசாத் நன்றியுரை ஆற்றினார். இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment