சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மாணவிகளுக்கான் கைப்பந்து போட்டியில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் அணியினர் இரண்டாவது இடம் பிடித்தனர், காரைக்குடி டாக்டர் . உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் நடை பெற்ற அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மாணவிகளுக்கான கைப்பந்து (Hand Ball) போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவிகள் அணியினர் இரண்டாவது இடம் பிடித்தனர்.
இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் ஜெயந்தி, கார்த்திகா ஆகிய இருவரும் அழகப்பா பல்கலைக்கழக கைப்பந்து அணிக்கு தேர்வு பெற்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான கைப் பந்து போட்டிகளில் அழ கப்பா பல்கலைக்கழக அணிக்காக விளையாடினர். வெற்றி பெற்ற அணியினரை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, உடற்கல்வி இயக்குநர் முனைவர் அசோக்குமார், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment