சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் நடைபெற்ற MEGANOMICS விழாவில் நடைபெற்ற போட்டிகளில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்றனர். திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியின் பொருளியல் துறை நடத்திய MEGANOMICS விழாவில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பொருளியல் துறை மாணவிகள் கலந்துகொண்டு பாட்டு போட்டியில் இரண்டாம் பரிசை முதலாம் ஆண்டு மாணவி லதா பாரதியும், பேச்சுப்போட்டியில் மூன்றாம் பரிசை இரண்டாம் ஆண்டு மாணவி விதுஷினியும் ஓவிய போட்டியில் மூன்றாம் பரிசை இரண்டாம் ஆண்டு மாணவி சுபிக்ஷாவும், வினாடி வினாப் போட்டியில் இரண்டாம் பரிசை மூன்றாம் ஆண்டு மாணவிகள் காளீஸ்வரி, சினேகா, துர்கா ஆகியோரும் பெற்றனர்.
பரிசு பெற்ற மாணவிகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, பொருளியல் துறைத் தலைவர் ஏ.பி.எஸ்.செல்வராஜ், பேராசிரியர் சூரியகாந்த் ஆகியோர் பாராட்டினர்.
No comments:
Post a Comment