அப்போது அங்கு வந்த மற்று சமூகத்தை சேர்ந்த அழகன் என்ற குமார் தனலெட்சுமியிடம் "நீ மாத்திரை கொடுத்து எங்க ஆளுக உசுரு வாழனுமா, மாத்திர கொடுக்கிறத நிறுத்து" என்று அசிங்கமாகவும், சாதியை சொல்லி ஒருமையில் பேசி தகராறில் ஈடுபட்டு மாத்திரைகளை கிழே சிதறடித்துள்ளார். நான் 'வேலை செய்வதை தடுக்காதீர்கள்' என்று கூரிய தனலெட்சுமியின் சேலையை பிடித்து இழுத்து கடும் வன்மத்தோடு தோள்பட்டையிலும், தலையிலும் பலத்த காயம் ஏற்படும் வகையில் அடித்துள்ளார், மேலும் அவரை தடுக்க வந்த செந்திலையும் கடுமையாக தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார்.
பலத்த காயத்திற்கு உள்ளாக்கப்பட்ட இருவரும் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகவே இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் இந்த இழிவான சாம்பவத்தை செய்த குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சிஐடியு சிவகங்கை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரில் உள்ள நுழைவு வாயிலில் திங்கட்கிழமை காலை சுமார் 11 மணியளவில் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவர் வீரையா, மாவட்ட செயலாளர் சேதுராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். தொழிலாளர் சங்க தலைவர் அங்கன்வாடி மாவட்ட செயலாளர் மேரி, மக்களைத் தேடி மருத்துவ சங்க மாவட்ட தலைவர் வித்யா, பொருளாளர் தீபிகா, கட்டுமான சங்க துணை மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment