இந்த தேசிய இளையோர் திருவிழாவில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் சித்ராவால் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட மூன்று நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் சார்பாக கலந்து கொண்டு கலைகளை வெளிப்படுத்தியும், சாகச முகாம்கள், யோகா மற்றும் மனவளக்கலை ஆகியவற்றில் கலந்து கொண்டும் சான்றிதழ்களைப் பெற்ற நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவியர்கள், கணிதத்துறை மாணவி பிரகதி, வரலாற்றுத் துறை மாணவர் ஜெகத்ரச்சகன், வணிகவியல் துறை மாணவி நூர்லமின் ஆகியோரை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, தமிழ் துறைத் தலைவர் முனைவர் முருகேசன், வரலாற்று துறைத் தலைவர் முனைவர் நிலோபர்பேகம், அழகப்பா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீனிவாசன், அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி முனைவர் தெய்வமணி, முனைவர் லக்ஷ்மணகுமார் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் பாராட்டினர்.
2024 ஆம் ஆண்டுக்கான தேசிய இளையோர் திருவிழா மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் நடைபெற்றது. ஜனவரி 12 முதல் 16 வரை நடைபெற்ற இந்த மாபெரும் தேசிய இளையோர் திருவிழாவை இந்திய நாட்டின் பிரதம மந்திரி மாண்புமிகு நரேந்திர மோடி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் 24 மாநிலங்களில் இருந்து 200 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகளும், நேரு யுவகேந்திரா இயக்கத்தின் மாணவர்களும் பங்கேற்று தங்கள் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் கலைகளை வெளிப்படுத்தினர்.
No comments:
Post a Comment