தியாகிகள் தினத்தை முன்னிட்டு அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் முனைவர் பெத்தாலட்சுமி முன்னிலையில் கல்லூரியின் ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்றும் அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கு இணங்க சமய வேறுபாடற்ற, சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதை உணர்வேன் என்றும் இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது எடுத்துக்காட்டாக என்றென்றும் விளங்குமென்றும் கூறி உளமாற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் முருகேசன் மற்றும் பேராசிரியர்களும் ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment