இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் சிவகங்கை மாவட்ட யுவகேந்திரா ஆகிய அமைப்புகளின் சான்றிதழ் அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் வீரவிதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் பயிற்சி அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒ.வெ.செ மேல்நிலைப் பள்ளியில் மாஸ்டர் கலை வளரு மணி டாக்டர் கே பெருமாள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டியில் சிவகங்கை இராமநாதபுரம் புதுக்கோட்டை விருதுநகர் மதுரை தேனி திண்டுக்கல் போன்ற பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் ஒற்றைக்கம்பு இரட்டைக் கம்பு சுருள் போன்ற போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சாதனை புரிந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கொண்டனர். இந்த வீரவிதை பயிற்சி பள்ளியானது மாநில மாவட்ட தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தங்கம் வெள்ளி பதக்கங்களை மாணவ மாணவிகள் பெற்று சாதனைகள் பல பெற பல உதவிகளையும் பயிற்சிகளையும் பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பதக்கங்களை பெற்ற மாணவ மாணவிகள் இப் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் தனி திறமைகளை வெளிப்படுத்தினர். அனைத்து பிரிவு போட்டிகளிலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வீர விதை சிலம்ப பயிற்சியாளர் மாஸ்டர் பெருமாள் அவர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
No comments:
Post a Comment