திருப்புவனம் கலியாந்தூர் கிராமத்தில் புதிய கலையரங்க கட்டிடத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 January 2024

திருப்புவனம் கலியாந்தூர் கிராமத்தில் புதிய கலையரங்க கட்டிடத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் நயினார்பேட்டை ஊராட்சி கலியாந்தூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட ரூபாய் 7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான கலையரங்கத்தினை மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் பொன். இளங்கோவன் மற்றும் கலியாந்தூர் கிளைச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோரின்  நிகழ்ச்சி ஏற்பாட்டில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் காளீஸ்வரி பொன்னுச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் ஏனாதி ராமலிங்கம், சங்கங்குளம் ஈஸ்வரன், லாடனேந்தல் மற்றும் சுப்பையா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரகமத்துல்லாகான்,  மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் சேகர், ஒன்றிய துணைச் செயலாளர் மகேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் சக்தி முருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் மேலவெள்ளூர் தேவதாஸ் மற்றும் பிரமனூர் அறிவுக்கரசு, இலக்கிய அணி தேளி கோபால்,  மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்கள் நைனார் பேட்டை காளிதாஸ் மற்றும் குருந்தங்குளம் பாண்டிய கிருஷ்ணன், ஒன்றிய பிரதிநிதி  சந்திரசேகரன், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad