அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட கல்லூரி முதல்வர் நம் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு விழா உரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து விழாவில் மாணவ மாணவிகள் மும்மதப் பாடல்களைப் பாடி ஒருமைப்பாட்டை வலியுறுத்தினர்.
இக்கல்லூரியில் பணியாற்றி இவ்வாண்டு பணி நிறைவு பெற இருக்கின்ற பேராசிரியர்கள் தமிழ் துறைத் தலைவர் முனைவர் முருகேசன், பொருளியல் துறைத் தலைவர் ஏ பி எஸ் செல்வராஜ், விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் சங்கர் பெருமாள், புவி அமைப்பியல் துறை பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் அலுவலக பணியாளர் அப்துல் ரகுமான் ஆகியோர் இவ்விழாவில் முதல்வரால் கவுரவிக்கப்பட்டனர். மேலும் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் சார்பாக நாட்டு நலப் பணி திட்டத்தின் தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் ஆசிரியர்களும், ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும், மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment