சிவகங்கை மாவட்டம் பொங்கல் விழாவை முன்னிட்டு மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாயமங்கலம் விலக்கு, செந்தமிழ் நகர், காரைக்குளம், பொன்னியேந்தல், வண்ணாரவயல் இளையான்குடி டவுன் இளையான்குடி புதூர் ஆகிய பல பகுதிகளில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள், சேலை, இனிப்புகள் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், திமுகவின் பேரூர் செயலாளர் பி.எ. நஜூமுதீன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுப. தமிழரசன், ஒன்றிய திமுக அவைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, பேரூராட்சி மன்ற துணை தலைவர் இபுராஹீம், மாவட்ட பிரதிநிகள் தெட்சிணாமூர்த்தி மற்றும் சாரதி, ஒன்றிய திமுக துணை செயலாளர்கள் கருணாகரன், சிவனேசன், இராஜேந்திரன், மற்றும் முருகேசன், திமுக இளைஞரணி பைரோஸ்கான் மானாமதுரை தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கண்ணன், ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி ராஜா, கிளை திமுக செயலாளர்கள் சுப்பிரமணி, கண்ணன் மற்றும் நீலமேகம், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் திமுக கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment