இப்பயிலரங்கத்தின் துவக்க விழாவில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலட்சுமி தலைமையேற்று, சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட நீர்நிலை மேலாண்மை பற்றிய முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் கலந்து கொண்டு கல்வி நிறுவனங்களும் அரசுத் துறைகளும் இணைந்து இம்மாவட்டத்தின் நீர் ஆதாரங்களை பெருக்கிட வேண்டிய உதவிகளை செய்வதற்கு தயாராக இருப்பதாகக் கூறினார்.
மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புவியமைப்பில் துறையின் முன்னாள் மாணவரும், கனடாவில் உள்ள கோல்மர் தங்க சுரங்கத்தின் சேர்மனுமான சேதுராமன், மாணவர்கள் புவியமைப்பில் பாடப்பிரிவினை படித்து பல உயர் பதவிகளை அடைந்து சாதிக்க வேண்டும் என்று கூறினார். இத்துறையின் முன்னாள் மாணவர் மற்றும் பேராசிரியர் மாணிக்கவாசகம் சிவகங்கை மாவட்டத்தின் நீர் ஆதாரத்தினை பெருக்கிட ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தேசிய நீர்நிலை நிறுவனத்தின் விஞ்ஞானிகளான செந்தில்குமார் மற்றும் மனிஷ் கே நீமா ஆகியோர் தேசிய அளவிலான நீர் ஆதார திட்டங்களை உள்ளூர் அளவில் பயன்படுத்தி மக்கள் பயன்படும் வகையில் திட்ட உதவிகள் செய்து தர உறுதியளித்தனர். வரவேற்புரை ஆற்றிய புவியமைப்பியல் துறையின் துறைத்தலைவர் மற்றும் பயிலரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் உதயகணேசன், இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தினை பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார் .மேலும், நன்றி உரையினை துறையின் உதவி பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன் வழங்கினார்.
- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்.
No comments:
Post a Comment