சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அவர்கள் தெரிவித்த கருத்தில், "மகாத்மா காந்தியின் போராட்டம் பயனிலைக்கவில்லை, இந்தியா சுதந்திரம் பெற நேதாஜியே காரணம்" என்று தெரிவித்த சர்ச்சையான கருத்திற்கு ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளையும் கொந்தளிப்படைய வைத்துள்ளது. அதற்கு உடனடியாக தகுந்த பதிலடியை ஆளுநருக்கு கொடுக்க வேண்டி சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் எதிரில் உள்ள காந்தி சிலை முன்பு இந்திய திருநாட்டின் தேசத்தந்தை காந்திக்கு எதிரான தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அவர்களின் விமர்சனத்தை வன்மையாக கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நகர, வட்டார, பேரூர் தலைவர்கள், மாநில, மாவட்ட, இளைஞர் காங்கிரஸ், தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும் திரளாக கைகளில் தேசிய காங்கிரஸ் கொடியினை ஏந்தியவாறு ஆளுநரை ரவி அவர்களுக்கு தங்களின் எச்சரிக்கை முழக்கமிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment