சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள முலைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், இவருடைய மனைவி பெயர் முத்துராக்கு. இவர் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட ஏறுவதற்கு முற்படும் போது தவறி கீழே விழுந்த முத்துராக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மானாமதுரை நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment