சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா நடத்திய விக்சித் பாரத் -2047 சிவகங்கை மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி காரைக்குடி, அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மார்ட்டின் ஜெயபிரகாஷ் வரவேற்புரை ஆற்ற நேரு யுவகேந்திராவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்ப் பேச்சுப் போட்டியின் நடுவர்களாக அழகப்பா அரசு கலைக்கல்லூரித் தமிழ்துறைப் பேராசிரியர்கள் முனைவர் பாரதிராணி, முனைவர் இரவிக்குமார், முனைவர் அனிதா ஆகியோரும், ஆங்கிலப் பேச்சுப்போட்டியின் நடுவர்களாக அழகப்பா பல்கலைக்கழக ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கனிமொழி, அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர்கள் முனைவர் சோமசுந்தரம், பேராசிரியர் சர்மிளா ஆகியோரும் செயல்பட்டனர். நுண்கலை மன்ற உறுப்பினர் முனைவர் செல்வமீனா அறிமுக உரையாற்றினார்.
முதல் பரிசினை வித்யா கிரி கல்லூரி மாணவர் முகமது கைப், இரண்டாம் பரிசினை, தீன்ஷாநூப் மூன்றாம் பரிசினை அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர் விகாஷ் ஆகியோர் பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி பாராட்டினார். பேச்சுப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுவாமி விவேகானந்தா நற்பணி மன்றத் தலைவர் யோகநாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளரும் உறுப்பினர்களும் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment