கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே மைலோடு பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள பங்குத்தந்தை அலுவலகம் அருகில் கடந்த 20ஆம் தேதி தக்களை நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் போக்குவரத்து கழக ஊழியருமான சேவியர் குமார் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.
இக்கொலைக்கு காரணமான குற்றவாளிகளையும், இதுபோன்ற வன்முறைகளை கண்டுகொள்ளாத திமுக அரசையும் கண்டித்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை மானாமதுரை நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வழக்கறிஞர் பாசறை துணைச் செயலாளர் ஆவரங்காடு கார்த்திக்ராஜா கண்டன உரையாற்றினார். மேலும் மானாமதுரை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment