மானாமதுரையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 January 2024

மானாமதுரையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய அமைச்சர்.


தமிழ் மொழிக்காக தங்களுடைய இன்னுயிரை துச்சமென மதித்து மாய்த்துக் கொண்ட தாளமுத்து, நடராசன், கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை மாணவர் இராஜேந்திரன், சத்தியமங்கலம் முத்து, வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஜனவரி 25 ஆம் தேதி திமுகவினரால் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுவது வழக்கம். 

அந்த வகையில் இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள திடலில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் விதமாக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் தியாகிகளின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர் பொதுக்கூட்டமும் தொடர்ச்சியாக நடைபெற்றது. 


இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி ரவிக்குமார், தலைமைக் கழக பேச்சாளர் கவிஞர் திருமதி சல்மா, நகரக் கழகச் செயலாளர் பொன்னுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர மன்ற தலைவர் எஸ் மாரியப்பன் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மேலும் மாவட்டத் துணைக் கழகச் செயலாளர் சேங்கைமாறன், பொது குழு உறுப்பினர் ஏ. ஆர் ஜெயமூர்த்தி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ரம்யா, ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜாமணி, மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணாதுரை, நகர் மாணவர் அணி அமைப்பாளர் கார்த்தி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ரம்யா, நகர் இளைஞர் அணி பொறியாளர் சு. சந்தனராஜ், ஒன்றிய நகர வேறொரு கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad