சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி திட்டம் 2022-2023 ஆம் ஆண்டின் கீழ் புதூரில் உள்ள வார்டு எண் 1 மற்றும் 2ல் ரூ. 5 லட்சம் மதிப்பிலான புதிய பயணியர் நிழற்குடை, கண்மாய்க்கரையில் உள்ள வார்டு எண் 17ல் ரூ. 5 லட்சம் மதிப்பிலான புதிய பயணியர் நிழற்குடை, ஓ.கே தெருவில் உள்ள வார்டு எண் 6ல் ரூ. 7 லட்சம் மதிப்பிலான மினி பவர் பம்ப் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் கழக செயலாளர் நஜ்முதின், கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், பேரூராட்சி துணை தலைவர் இப்ராஹிம், வார்டு உறுப்பினர் சைபு நிசால் பேகம், தௌலத், ராஜவேல், ராவியத்துல், பதவியால், நடராஜன், ஜெயின் மற்றும் இஸ்ரின் பேகம், இளைஞர் அணி பைரோஸ்கான், ஆரிஃப், முகமது யூசப் மற்றும் பரித் அஸ்லாம், விவசாய அணி காளிமுத்து, இப்ராஹிம்ஷா, கண்ணன், காதர், அழகேசன் மற்றும் சீனி, கிளை கழக செயலாளர் சதியேந்திரன், இப்ராம்ஹா மற்றும் கனிமுகமது, மாவட்ட பிரதிநிதி கருணாகரன், ஒன்றிய துணை செயலாளர் சிவனேசன், செயல் அலுவலர் கோபிநாத், அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment