தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சிக் கவிஞர் மாண்புமிகு உயர்திரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வருடம் டிசம்பர் 28 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் விஜயகாந்த் அவர்களின் மனைவி, தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா அவர்களின் வழிகாட்டுதலில் தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன் அவர்களின் தலைமையில் திருப்புவனத்தில் உள்ள புண்ணிய ஸ்தளத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு 30ஆம் நாள் திதி கொடுத்தும், அவருடைய அஸ்தி கறைக்கப்பட்டும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் இதய அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் கணபதி, சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திருவேங்கடம், சிவகங்கை மாவட்ட கழக பொருளாளர் துறை பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணா கண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் முத்து கிருஷ்ணன் மற்றும் வேலுசாமி, சிவகங்கை மாவட்ட கழக துணைச் செயலாளர் எம். ஆர் மாயழகு, திருப்புவனம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் காந்தி, திருப்புவனம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் செட்டி அம்பலம், திருப்புவனம் நகர செயலாளர் அலாவுதீன், மானாமதுரை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தர்மா ராமு, மானாமதுரை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிவராஜன், கிளைக்கழக நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமனோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment