முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசிரவிக்குமார், முன்னாள் அமைச்சர் முகவை தென்னவன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன், மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி மன்றத் தலைவர் கே. எஸ். எம். மணிமுத்து, மாநில மாணவரணி துணைச் செயலாளர் பூர்ணா சங்கீதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் இதில் ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இளையான்குடி ஒன்றிய கழக செயலாளருமான சுப. மதியரசன், ஜெயராமன், முத்துராமலிங்கம், கல்லல் நெடுஞ்செழியன், யோக. கிருஷ்ணகுமார், ஆரோக்கியசாமி, கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடுதலாக இந்நிகழ்வில் மாவட்ட அயலக அணி தலைவர் கேப்டன் ஆர். வி. சரவணன், நகர்மன்ற துணைத் தலைவரும் சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவருமான வழக்கறிஞர் கார்கண்ணன், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் தனசேகரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மீனாட்சி கட்பீஸ் தனசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு பேராசிரியர் சிங்கமுத்து மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மதிவாணன், கிங் கார்த்திக், மாவட்ட தொழிலாளரணி துணை அமைப்பாளர் புதுப்பட்டி அர்ச்சுணன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் மார்கரேட் கமலா பத்திநாதன், மாவட்ட மின்திட்ட செயலாளர் தொமுச முருகேசன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள் அறங்காவலர் ஒமேகா திலகவதி கண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திருமலை குமணன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பிரவீண்குமார் மாவட்ட பிரதிநிதிகள் ஜெயகாந்தன் வீரகாளை, கவுன்சிலர்கள் பாக்யலெட்சுமி, விஜயகுமார், இஸ்ரின் பேகம், வீணஸ் இராமநாதன், அயூப் கான், இராஜபாண்டி, ஆறு. சரவணன், இராமதாஸ், கீதா கார்த்திகேயன், மதியழகன், ஐடி விங் நிர்வாகிகள் இளையான்குடி கண்ணன், தமறாக்கி அம்பலம், ஹரிபாஸ்கர், வட்டச் செயலாளர்கள் கீழக்குளம் சேகர், கண்மணி, ஆனந்த், தேவஸ்தானம் முருகேசன், சுப. ஜெயக்குமார், ஆர். டி. சேகர், வெல்டிங் முனியராஜ், தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மூக்குத்தி பாலா, முத்துக்குமார், இளைஞரணி தங்கம், அழகுசுந்தரம், பொன்னம்பலம், மெடிக்கல் பாரத் உள்ளிட்ட ஏராளமான திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment