இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார அளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜீத் இ.ஆ.பா அவர்கள் இத்திட்டத்தினை புதன்கிழமையான இன்று முதன்முறையாக தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் இத்திட்ட தொடக்கத்தின் ஒரு பகுதியாக மானாமதுரை வட்டத்தில் உள்ள நியாய விலை கடையில் ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து மானாமதுரை ஒன்றியம் சூரக்குளம் பில்லருத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட குலையனூர் கிராமத்தில் அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்து விவசாய பெருமக்களுக்கான புதிய நேரடி கொள்முதல் நிலையத்தையும் ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் காங்கிரஸ் பேரியக்க மூத்த முன்னோடி எ.ஆர்.பி. முருகேசன், நகர் கழக செயலாளர் பொன்னுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட வருவாய் அலுவலர் மோகன சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் சுகிர்தா, வட்டாட்சியர் ராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment