சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி வார்டு எண் 9ல் உள்ள குடிதண்ணீர் சின்டெக்ஸ் சுமார் ஒன்றரை வருடங்களாக பழுதான நிலையில் இருந்து வருகிறது என பொதுமக்களிடம் புகார் எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து கேட்டபோது கூறுகையில், "இந்த குடிதண்ணீர் சின்டெக்ஸ் தொடர்பாக ஊராட்சி ஒன்றியத்தில் பலமுறை நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் யாரும் எடுக்க முன்வரவில்லை. குடிதண்ணீர் கீழே வடிந்து வீணாகிவருவது தொடர் கதையாகியுள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ள சுமார் 300 குடும்பங்கள் குடிதண்ணீரை சரிவர கிடைக்கப்பெற்று பயன்படுத்த முடியாத அவல சூழ்நிலை நிலவியது வருகிறது. ஆகவே இப்பிரச்சினை குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொதுமக்களுக்கு சின்டெக்ஸை மாற்றி குடிநீர் பெற வழிவகை செய்துதர வேண்டி வலியுறுத்தி கொள்கிறோம்" என்றனர். எனவே இக்கோரிக்கை இம்முறையாவது எங்கள் கோரிக்கை நிறைவேறுமா என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்ட எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
No comments:
Post a Comment