சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகங்கை பத்திரிக்கையாளர் நல சங்கத் தலைவரும் மாலை தந்தி நாளிதழ் ஆசிரியருமான பொன்ராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட நியூஸ்7 பல்லடம் செய்தியாளர் நேச பிரபுவை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்., இந்த தாக்குதல் நடக்கும் முன்னரே பல்லடம் காவல்துறையினரிடம் மூன்று முறை தகவல் தெரிவிக்கப்பட்டும் தாக்குதலை தடுக்க தவறிய காவல்துறையை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டமன்றத்தில் பத்திரிக்கையாளரின் பாதுகாப்பிற்கான தனிச்சட்டம் ஏற்ற வேண்டும் இந்தக் கொலை வெறி தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு விரைவில் தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசிற்கு கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. மாவட்டச் செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment