அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலின்படி தமிழ் துறைத் தலைவர் முனைவர் முருகேசன் உறுதி மொழியை வாசிக்க பேராசிரியர்களும், ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும், கல்லூரியில் பயிலும் மாணவர்களும் தத்தம் வகுப்புகளில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம்,இனம், சாதி, வகுப்பு ,மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதிமொழிகிறோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.மாவட்ட செய்தியாளர் முத்து ராஜன்
No comments:
Post a Comment