இதில் மாவட்ட திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆ. ரா. சிவராமன், மாவட்ட துணை செயலாளர் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் நகர் கழகச் செயலாளர் பொன்னுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் துரை. ராஜாமணி மற்றும் அண்ணாதுரை, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை ஒன்றிய, துணை பெருந்தலைவர் முத்துசாமி, சிவகங்கை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் டி. மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி உதவி பொறியாளர் எம். விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பா. லூயிஸ் ஜோசப் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி காளியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி பொறியாளர் சு. சந்தனராஜ், வேம்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட பிரதிநிதி வி. எம். சமயமுத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துராமன், கிளைச் செயலாளர்கள் கண்ணன் முருகன் சிவகுமார் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் வேம்பத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 25.99 லட்சம் செலவில் வேம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் புதிய ஊராட்சிமன்ற கட்டிடம் மற்றும் ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் ஆகிய கட்டிடங்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்களின் தலைமையில் மண்புமிகு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
No comments:
Post a Comment