அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 January 2024

அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி.


அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் அணி முதல் இடத்தையும், மாணவிகள் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பாக அழகப்பா அரசு கலைக் கல்லூரி ஏற்று நடத்திய இந்தப் போட்டி கடந்த மூன்று நாட்களாக கல்லூரியில் நடைபெற்றது. 

இதில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்ற கல்லூரிகள் கலந்து கொண்டன. மாணவர்களுக்கு நடைபெற்ற போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதலிடத்தையும் மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்றது. மேலும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மாணவர்கள் பாலகுமார் முதலாம்  ஆண்டு முதுகலை வணிகவியல், உதயகுமார் முதலாம் ஆண்டு இளங்கலை  வணிகவியல், மகேந்திரன்  முதலாம் ஆண்டு முதுகலை பொருளாதாரம், பிரியா காந்த், இரண்டாம் ஆண்டு இளங்கலை புவி அமைப்பியல், ஹரிஹர பாண்டி இரண்டாம் ஆண்டு,இளங்கலை தொழில் நிர்வாகவியல், திருமுருகன்  மூன்றாம் ஆண்டு இளங்கலை தாவரவியல் ஆகிய ஆறு பேரும்   சென்னை இந்துஸ்தான் நிகர்நிலைப்  பல்கலைக்கழகத்தில் ஜனவரி 7ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பாக கலந்து கொண்டு விளையாட இருக்கின்றார்கள். 


அதுபோல சிறப்பாக விளையாடிய அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மாணவிகள் அபிநயா,  இரண்டாம் ஆண்டு முதுகலை இயற்பியல், ரூத் எஸ்தர், இரண்டாம் ஆண்டு முதுகலை இயற்பியல், வினோதா, இரண்டாம் ஆண்டு இளங்கலை வணிகவியல், லக்க்ஷனா,இரண்டாம் ஆண்டு இளங்கலை வணிகவியல், ஜெனிலா இரண்டாம் ஆண்டு முதுகலை வணிகவியல் ஆகிய ஐந்து பேரும் வருகின்ற 17ஆம் தேதி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் தென் மண்டல பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பாக கலந்து கொண்டு விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, உடற்கல்வி இயக்குனர் முனைவர் அசோக்குமார், தமிழ் துறைத் தலைவர் முனைவர் முருகேசன், வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் நிலோபர் பேகம் மற்றும் பேராசிரியர்களும் ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும் பாராட்டி வாழ்த்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad