மானாமதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு இரண்டாம் கட்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 January 2024

மானாமதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு இரண்டாம் கட்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண பொருள்களை முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் கனரக வாகனம் மூலமாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், காங்கிரஸ் பேரியக்க மூத்த முன்னோடி ஏ. ஆர். பி முருகேசன், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம். ஏ. கடம்பசாமி , கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, நகர் கழக நிர்வாகிகள் அச்சங்குளம் முருகன், மன்னார் மன்னன், திருமுருகன், ராஜேந்திரன், விஜயகுமார், நகர் கழக 5 வது வார்டு செயலாளர் மூர்த்தி, விளத்தூர் கிளை செயலாளர் மருதுபாண்டியன், இளையான்குடி இளைஞர் அணி பைரோஸ்கான், தகவல் தொழில்நுட்ப தொகுதி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், செங்கிஸ்கான், திருப்புவனம் முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் அப்பாச்சாமி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் காத்தமுத்து, முன்னாள் எம்.சி கணேசன், கழக நிர்வாகிகள் பேராசிரியர் பார்த்தசாரதி, திருப்புவனம் பிரபு மற்றும் புவனேஸ்வரன், கீழப்பசளை சிவா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad