பையூரில் வீரத்தாய் குயிலின் திருவுருவ சிலைக்கு காணொளி மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 January 2024

பையூரில் வீரத்தாய் குயிலின் திருவுருவ சிலைக்கு காணொளி மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர்.


சிவகங்கை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை முன்னேற்பாட்டில் சிவகங்கை மாவட்டம் பையூரில் வீரமங்கை வேலு நாச்சியாருக்கு போராட்டக் களத்தில் உதவியாக இருந்த வீர தமிழச்சி குயிலியை போற்றும் விதமாக அவருக்கு திருவுருவச் சிலை அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்கள். 

அதனை தொடர்ந்து மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.  தமிழரசிரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். 


மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad