சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு கார்த்திக் ப. சிதம்பரம் அவர்கள் மதுரையில் நடைபெற்ற கட்சி பிரமுகரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, "பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரை தாங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், திமுக கூட்டணியில் இன்னும் புதிய கட்சிகள் இணையும் வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் மாபெரும் அமோக வெற்றி பெறும் என்றும், சிவகங்கை பாராளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் 1870 பூத் கமிட்டியினர்களுக்கு அடையாள அட்டை வழங்கக்கூடிய அளவிற்கு தேர்தல் வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அயோத்தி ராமர் கோவில் திறப்பதால் தேர்தலில் ஓட்டுப் பெற முடியும் என்று கூறி விட முடியாது கடந்த 10 வருடங்களாக பாஜக மக்களுக்கு என்ன செய்தது என்ற கட்டமைப்பை பொறுத்து தான் தேர்தலில் வாக்கு பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்". இதில் சிவகங்கை மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜீவ் கண்ணா மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பால்நல்லதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment