காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 1981-1984ஆம் கல்வியாண்டில் படித்த மாணவ மாணவிகள் 40ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நெகிழ்ச்சி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2024

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 1981-1984ஆம் கல்வியாண்டில் படித்த மாணவ மாணவிகள் 40ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நெகிழ்ச்சி.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 1981-1984ஆம் கல்வியாண்டில் பிஎஸ்சி இயற்பியல் படித்த மாணவ மாணவிகள் 40ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சி கல்லூரியின் இயற்பியல் துறையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி வரவேற்புரை ஆற்றினார். 1981-1984 ஆம் கல்வியாண்டில் இயற்பியல் பயின்ற 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  மேலும் தாங்கள் பயின்ற இயற்பியல் துறையில் தற்போது பயிலும் மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் யுபிஎஸ் மின்சாதன இயந்திரம் ஆகியவற்றைத் தருவதாக முதல்வரிடம் உறுதியளித்தனர்.  


இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் இயற்பியல் துறையில் பயின்று தற்போது பல்வேறு துறைகளிலும், நிறுவனங்களிலும் பணியாற்றி வரும் சந்தானம், திருமலை, நாராயணன், சிவப்பிரகாஷ், சுப்பிரமணி, மூர்த்தி, விஸ்வநாதன், லட்சுமணன், சேவுகன் ஆகியோர் பங்கேற்று தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நெகிழ்ச்சியான இந்த சந்திப்பில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் கவிதா, முனைவர் தெய்வமணி மற்றும் பேராசிரியர்களும், ஆசிரியரல்லாப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad