சிவகங்கையில் பாரதி இசைக் கல்வி கழகம் மாநில அளவில் நடத்திய பேச்சுப் போட்டியில் பவித்ரா, சாருமதி, மாதரசி பைரவ ரூபினி ஆகியோர் கலந்துகொண்டு இயல்பாரதி விருது பெற்றனர். மாவட்ட அளவில் நடைபெற்ற பாரதியார் நூற்றாண்டு விழா கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசினையும் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி நிறுவனர் நாள் விழாக் கவிதைப் போட்டியில் முதற்பரிசினையும் மாணவி பிரியங்கா பெற்றார்.
வீறுகவியரசர் முடியரசனார் அவைக்களம் நடத்திய பேச்சுப்போட்டியில் மூன்றாம் பரிசினை மாதரசியும் மாவட்ட அளவில் நடைபெற்ற அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் விழாப் பேச்சுப்போட்டியில் மூன்றாம் பரிசினை ஆர்த்தியும் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாப் பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசினை அபிநயாவும் பெற்றனர்.
பரிசு பெற்ற மாணவிகளை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, நுண்கலைமன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மார்ட்டின் ஜெயபிரகாஷ், உறுப்பினர்கள் முனைவர் செல்வமீனா, பேராசிரியர் சர்மிளா, முனைவர் லெட்சுணக்குமார் ஆகியோர் பாராட்டினர்.
No comments:
Post a Comment