சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 'தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை' சார்பாக "முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்" முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் 'முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்' மற்றும் 'ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம்' ஆகிய திட்டங்களில் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறவேண்டி மருத்துவப் பயனாளிகள் இம்முகாமை பயன்படுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டனர். மேலும் சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்ட இம்முகாம் பொதுமக்களுக்கு வசதியாக விடுமுறை நாளான ஞாயிறு மதியம் 2 மணி வரை தொடரும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் நகர ஒன்றிய பேரூர் கழக திமுக நிர்வாகிகள், மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment