மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 December 2023

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.


மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு “உரிமைகள்” திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு – 2023 தொடா்பான கணக்கெடுப்பு செயலியினை  மற்றும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் கையெழுத்து இயக்கத்தினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்  தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்,  இதமிழ்நாடு “உரிமைகள்” திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு – 2023 தொடா்பான கணக்கெடுப்பு செயலியினை , மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித்  தொடங்கி வைத்து தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலைமைச்சர், மாற்றுத்திறனாளிகளின் நலனை கரத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறார். மேலும், அவர்களது கூடுதல் தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு அவர்களுக்கான தனி முகாமினையும், அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே அவ்வப்போது நடத்தப்பட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட வழிவகை ஏற்படுத்தியுள்ளார்கள்.


அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலைமைச்சர், தமிழ்நாடு “உரிமைகள்”என்ற திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தொடங்கப்பட்டு, அத்திட்டத்தின் கீழ் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு-2023 தொடர்பான பணி தொடங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தின் கடைக்கோடி பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கிடும் பொருட்டும், அவர்களுக்கான உள்ளடக்கிய வாய்ப்புகளை மேம்படுத்திட ஏதுவாகவும்  இத்திட்டத்தின் ஒரு அங்கமாக  அமைகிறது அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  மாற்றுத்திறனாளிகள் குறித்தான சமூக தரவுகள் கணக்கெடுப்பு குறித்துஇ அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் சமூக தரவுகள் பதிவு குறித்து தகவல் சென்றடையவும், மாற்றுத்திறனாளிகள் அனைவரிடமும் சமூக தரவுகள் பதிவில் பங்கேற்கும் ஆர்வத்தினை உருவாக்கிடவும், மாற்றுத்திறனாளிகளுடன் தொடர்பில் உள்ள நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மூலமாக சமூக தரவுகள் பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், கணக்கெடுப்பு தரவுகள் பதிவு செய்வதற்கான செயலி இன்றைய தினம்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 


மேலும், இவை தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் கையெழுத்து இயக்கமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு கணக்கெடுப்பு தற்சமயம் முதல் சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலுள்ள கிராமங்கள் என, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. இக்கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கக் களப்பணியாளர்களும் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்கள் என,   மொத்தம் 515 பணியாளர்களுக்கு சமூக தரவுகள் பதிவு குறித்த கணக்கெடுப்பு  தொடர்பான செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. 


இதில், கணக்கெடுப்பு பணிகளை மாற்றுத் திறனாளிகளின் வீட்டிற்கு நேரிடையாக சென்று,  பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இக்கணக்கெடுப்பின் நோக்கமானது, மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கும், எதிர்கால முன்னேற்றத்திற்கும் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கும்  இத்திட்டம் உறுதுணையாக இருக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கென செயல்படத்தப்பட்டு வரும் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் உரிய பயன்களை அவர்கள் பெறுவதற்கான நடவடிக்ககைகள் இவ்வாறாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளும்இ தங்கள் தகவல்களை இக்கணக்கெடுப்பில் முழுமையாக வழங்கி, அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்  வ.மோகனச்சந்திரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் கெ.ஜெ.டி.புஸ்பராஜ்  மற்றும் மாற்றுதிறனாளிகள் சங்கபிரதிநிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad