சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாநில அளவிலான கராத்தே போட்டியை மானாமதுரையில் உள்ள 'நாகர்ஜூன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியின்' சார்பாக நடத்தும் '3 ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கராத்தே போட்டியானது' விழா தலைமை ஒருங்கிணைப்பாளர் டி. ஈஸ்வர்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சிவ. நாகர்ஜுன் ஆகியோரின் தலைமையில் ஞாயிறு காலை சுமார் 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.எஸ்.பி.எ & உ கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணன், பாபா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் கபிலன், வெங்கடேஷா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் ராஜ்குமார், காவல் ஆய்வாளர் முத்துகணேஷ், காவல் சார்பு ஆய்வாளர் பூபதிராஜ் மற்றும் வைரம் லையன்ஸ் கிளப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இப்போட்டியில் ஏராளமான சிறுவர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிச் சென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்போட்டியை காண பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment