மானாமதுரை ஆலம்பச்சேரி கிராமத்தில் நெல் பயிரில் வயல் வெளிப்பள்ளி துவக்க விழா நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 December 2023

மானாமதுரை ஆலம்பச்சேரி கிராமத்தில் நெல் பயிரில் வயல் வெளிப்பள்ளி துவக்க விழா நடைபெற்றது.


உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் 2023-24 பகுதி - 4 கீழ்வைகை உபவடி நிலம் பகுதியில் ஆலம்பச்சேரி கிராமத்தில் நெல் பயிரில் வயல் வெளிப்பள்ளி துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சிவகங்கை வேளாண்மை துணை இயக்குநர் (மா.தி) திருமதி செல்வி அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார். 

திருந்திய நெல் சாகுபடியில் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். களைக்கருவி உபயோகித்து 14 நாட்கள் வயதுடைய ஒற்றைநாற்று நடவு முறை, கோனோ களைகளை மடக்கி உழுவதால் களைச் செலவு குறைவு மற்றும் அதிக சிம்பு வெடித்து கதிர்கள் கூடுதலாக உருவாவதால் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவற்றை எடுத்துக்கூறினார். 


வேளாண்மை உதவி இயக்குநர் மானாமதுரை திரு ஜா. இரவிசங்கர் அவர்கள் நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும் முறைகள், திட்டங்கள் அதற்கான மானிய முறைகள் வேளாண் விரிவாக்க மையத்தில் மானியத்தில் வழங்கப்படும் இடுபொருட்கள் குறித்து எடுத்துரைத்தார். திரவ உயிர் உர உற்பத்தி மைய மூத்த வேளாண் அலுவலர் திரு வி. கருணாநிதி அவர்கள் உயிர் உரங்கள் பயன்பாடு உர மேலாண்மை குறித்து எடுத்துரைத்தார். 


சிவகங்கை மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் திரு நாகராஜன் அவர்கள் மண் பரிசோதனை மற்றும் நுண்ணுாட்டம் சத்துக்களின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். துணை வேளாண் அலுவலர் திரு நா. சப்பாணிமுத்து மற்றும் உதவி வேளாண் அலுவலர் திருமதி. சி. சுமதி  ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதனை தொடர்ந்து மண் மாதிரி எடுத்தல், விதை நேர்த்தி செய்தல் தொடர்பான செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad