சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 'நாகர்ஜூன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியின்' சார்பாக நடைபெற்ற '3 ஆண்டு மாநில கராத்தே போட்டியில்' ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் பசும்பொன்னில் உள்ள ஜேம்ஸ் பள்ளியின் சார்பாக 31 மாணவ மாணவிகள் பங்கேற்ற நிலையில், 15 - முதல் பரிசும், 7- இரண்டாம் பரிசும், 8 - மூன்றாம் பரிசும் பெற்று அப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் திரு நாகார்ஜுன், பள்ளி ஆசிரிய பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் அவர்களை வரவேற்றதுடன், தங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டனர்.
No comments:
Post a Comment