சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் இளையான்குடி நாம் தமிழர் கட்சி சார்பாக இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 'திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்' நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை மானாமதுரை சட்டமன்றத் தொகுதி செயலாளர் பொறியாளர் ச. ஆனந்தன் தலைமை தாங்கினார்.
சிவகங்கை தெற்கு மாவட்ட தலைவர் அ. அறிவழகன், இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ச. சேரா, இளையான்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் உ. பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உழவர் பாசறை இணைச் செயலாளர் உ. சிவராமன் அவர்கள் கண்டன உறை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment