சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர் திட்டம்' கோபால் இந்திரா மஹாலில் நடைபெற்றது. இம்முகாமில் 13-க்கும் மேற்ப்பட்ட துறைகள் கலந்து கொண்டன. இதில் பெறப்பட்ட மனுக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் விரைந்து தீர்வுகாண மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சுகிர்தா, வட்டாட்சியர் ராஜா, நகராட்சி ஆணையர் ரெங்கநாயகி, திமுகவின் நகர செயலாளர் பொன்னுசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை ராஜாமணி அவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment