மானாமதுரை ஒவெசெ பள்ளியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 December 2023

மானாமதுரை ஒவெசெ பள்ளியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது.


டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட மானாமதுரையில் உள்ள ஒவெசெ பள்ளியில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் 'தனியார் வேலைவாய்ப்பு முகாமினை' முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். 

இம்முகாமில் பங்கேற்க மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 1200க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பெயரை நேர்முக தேர்விற்கு விண்ணப்பம் செய்திருந்த நிலையில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு வேலைக்கான ஆணைகளும் பெற்றனர். 


இம்முகாமில் நகர் கழக செயலாளர் பொன்னுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, ஒன்றிய துணை தலைவர் முத்துசாமி, மகளிர் அணி துணை அமைப்பாளர் வளர்மதி, நகர் கழக துணை செயலாளர் மன்னர் மன்னன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன், மகளிர் திட்ட அலுவலர் வானதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கணேஷ்மூர்த்தி மற்றும் ராஜலட்சுமி, வட்டாட்சியர் ராஜா, 2வது வார்டு செயலாளர் திருமுருகன், கட்சி நிர்வாகிகள் தேசிங்குராஜா, அழகேசன், சிவனேசன், கண்ணன், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் திரலாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad