சிவகங்கை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொதுப்பணி துறையின் கீழ் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாத்தனூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் ஒரு கோடியை 5 லட்சம் மதிப்பிலான ஐந்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கு மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையிலும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் முன்னிலையிலும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் திமுகவின் மாவட்ட துணை செயலாளர் திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர செயலாளர் பொன்னுச்சாமி, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், வெங்கட்ராமன், தமிழ்மாறன், ஊராட்சி மன்ற தலைவர் சரளா, ஒன்றிய கவுன்சிலர்கள் மலையரசி ரவிச்சந்திரன், தனசேகரன், சாத்தையா தனலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவச் செல்வங்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment