இதுகுறித்து பயணிகளிடம் கேட்டபோது, "ஏற்கனவே மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரியப்படுத்தி, மானாமதுரை செல்லும் பயணிகளை அனைத்து பேருந்திலும் பயணிக்க சம்மந்தப்பட்ட பேருந்து நடத்துனர்களிடம் துறை ரீதியாக அறிவுறுத்தியுள்ளார். மேலும் பயணிகளை ஏற்றவோ இரக்கவோ மறுக்கும் நடத்துநர் மீது புகார் தெரிவிக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், புதன்கிழமையன்று மானாமதுரை வழியாக மதுரை - இராமநாதபுரம் செல்லும் TN58N2401 என்ற அரசு பேருந்து நடத்துனர் மானாமதுரை செல்லும் பயணிகளை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறங்க வற்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் பல முறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும், நடத்துநர்களிடையே எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இந்த அவலநிலை தொடர்கிறது என பயணிகள் வேதனை தெரிவித்தனர். கூடுதலாக மதுரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து மானாமதுரை வழியாக செல்லும் அனைத்து பேருந்தும் மானாமதுரை பைபாஸ் தல்லாகுளம் முனியாண்டி கோயில் சர்வீஸ் ரோட்டில் செல்ல கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே அரசு போக்குவரத்து கழகத்தால் ஆணை பிறப்பித்த நிலையில், அந்த உத்தரவையும் இன்றுவரை அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பின்பற்றப்படுவதில் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்த பயணிகள், உடனடியாக சம்மந்தப்பட்ட பேருந்து நடத்துனர் மீது போக்குவரத்து துறை ரீதியான தக்க நடவடிக்கை எடுக்குமாறு பேருந்து பயணிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்".
No comments:
Post a Comment