அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கம் நிறுவப்பட்டு 139வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை சிறப்பாக கொண்டாடும் விதமாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் மானாமதுரை காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாவட்டத் தலைவர் ஏ. சி. சஞ்சய்காந்தி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி மற்றும் ஏ.ஆர். பி. முருகேசன் ஆகியோரின் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றப்பட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் நகர மன்ற உறுப்பினர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் கட்சியினர் நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பும் தபால் அலுவலகம் எதிரில் உள்ள கொடிக்கம்பம் முன்பும் வண்ணமயமான கோலங்கள் இடப்பட்டு, தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் முன்னாள் வட்டார தலைவர் முல்லை ஏ. சின்னசாமி, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ராஜீவ் கண்ணா, மாவட்ட நகர வட்டார பேரூர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment