சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மகன் அரிகிருஷ்ணன்(34) தாயமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள மரச்சிற்ப கூடத்தில் வேலை செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் திருமணம் தொடர்பான பேச்சு நடந்துள்ளதாகவும், இந்நிலையில் ஏற்கனவே மன விரக்தியில் இருந்ததாக கூறப்படும் அரிகிருஷ்ணன் திடீரென மரச்சிற்ப கூடத்திற்குள் சென்று தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் புகாரின் அடிப்படையில் மானாமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment