சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்களின் முழுமுதற் முயற்சியால் 'மெய்நிகர் வேலைவாய்ப்பு' என்னும் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அமைத்து தரும் முற்றிலும் இலவசமான, பதிவு கட்டண ஏதுமில்லா சேவை எனவும், இதில் 2021 முதல் 2023 ஆண்டில் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருப்பது தகுதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொள்ளலாம் எனவும் பிபிஓ மற்றும் ஐடி துறை தவிர மற்ற அனைத்து துறைகளுக்கும் மொழி தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோமொபைல், வங்கி, பிபிஓ/ஐடி, ஹோட்டல்/விருந்தோம்பல், தொலைத்தொடர்பு, உற்பத்தி, ஜவுளி ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக fallynjobs.com என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் வாயிலாக கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment