சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியில் உள்ள சி.எஸ்.ஐ சர்ச்சில் கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, மாவட்ட அரசு வழக்கறிஞர் எல். பாலசுப்பிரமணியன், சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி மாங்குடி ஆகியோர் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments:
Post a Comment