சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் உள்ள நறுமணப் பூங்கா வளாகத்தில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா சார்பில் முதலீட்டாளர்கள் கலந்தாய்வு மற்றும் உணவு & நறுமணப் பொருட்களுக்கான வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சிதம்பரம் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், பல்வேறு அரசுத் துறைகளை சேர்ந்த அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment