சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிரபல திரைப்பட நடிகர் திரு ரஜினி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மானாமதுரை ஒன்றிய மற்றும் நகர் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக கீழ்கரை அருள்மிகு சோணையா கோவிலில் தலைவர் பெயரில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் திரு நாமேஸ்வரன் தலைமையிலும் ஒருங்கிணைப்பாளர் எம். ரவிக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது . மேலும் இந்நிகழ்வில் மானாமதுரை நிர்வாகிகள் எ. கருப்புச்சாமி, சி.பி. ராஜா, எம். ஆறுமுகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கருப்புசாமி டி.சி. கவிக்குமார், மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment