சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் குன்றக்குடி மக்கள் கல்வி நிலையம், மேலப்பள்ளிவாசல் டிரஸ்ட் மற்றும் டைம் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 'சான்றிதழ் வழங்கும் விழா' நடைபெற்றது. இவ்விழாவை மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு பா. சிதம்பரம் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இதில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment