சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஒவெசெ பள்ளியில் தனியார் நிறுவனங்கள் மூலமாக சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம், மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வருகிற 16-ஆம் தேதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் இதில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையிலும், அனைத்து விதமான தகுதிச் சான்றிதழ்கள் பெற்றவர்களும் பங்கேற்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
No comments:
Post a Comment