அம்மனுவில் கூறிப்பிடப்பட்டிருப்பது பின்வருமாறு, "மானாமதுரை கல்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தயா நகர், எம்.ஜி.ஆர். நகர், தீத்தான்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற வேண்டிய பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு உட்பட்ட துப்புரவு பணி, குடிநீர் விநியோகம், முறையான தெருவிளக்கு, சரியான சாலை வசதி போன்ற பணிகள் சுமார் 2 வருடங்களுக்கு மேல் எந்த பணிகளும் நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்த வரும் காரணத்தினால் பொதுமக்கள் போராடும் மனநிலையில் உள்ளனர் எனவும், எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இப்பகுதி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தனி கவனம் செலுத்தி அடிப்படை மற்றும் அத்தியாவசிய பணிகளை காலதாமதம் இல்லாமல் நடைபெற செய்யவும், குறிப்பாக தயா நகர் சாலை வசதி, தயா நகர் அனைத்து வீதிகளிலும் மின்வசதி (மின் கம்பி மாற்றம் செய்தல்), தயா நகர் பகுதிகளில் துப்புரவு பணி, எம்.ஜி.ஆர் நகர் பழுதடைந்த சாக்கடை ஸ்லாப்களை சரி செய்து சுத்தம் செய்தல், எம்.ஜி.ஆர் நகர் துப்புரவு பணி, எம்.ஜி.ஆர் நகர் சின்டெக்ஸ் சுத்தம் செய்தல், தீத்தான்குளத்தில் உள்ள பழுதடைந்த சின்டெக்ஸ் மாற்றம் செய்தல், தீத்தான்குளம் குமரவேல் வீடு பின்புறம் தேங்கி நிற்கும் கழிவு நீரை சுத்தம் செய்தல் போன்ற அடிப்படை வசதிகளை அமைத்து தர முன்வர வேண்டும் எனவும் ஊராட்சிக்குட்பட்ட உள்ள அனைத்து பொதுமக்களின் சார்பாக வலியுறுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினரும், தீத்தான்குளம் திமுக கிளைச் செயலாளருமான திரு கரு. ஆ. பால்பாண்டி அவர்கள் மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு தனது ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்து பொதுமக்களின் சார்பாக மனு அளித்துள்ளார்.
No comments:
Post a Comment