இந்நிகழ்வில் திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன், திருப்புவனம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா கான், ஒன்றிய குழு பெருந்தலைவர் தூதை சின்னையா, ஒன்றிய துணை பெருந்தலைவர் அழ. மூர்த்தி, திருப்புவனம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கடம்பசாமி, மானாமதுரை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மானாமதுரை நகர் மன்ற தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி, பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா, முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர் தேவிகா ராணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத்தின் சார்பு அணியினர், கழக முன்னோடிகள், ஆசிரிய பெருமக்கள், மாணவ செல்வங்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 2.97 கோடி மதிப்பில் 14 கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்களின் முன்னிலையிலும் அடிக்கல் நாட்டப்பட்டது.
No comments:
Post a Comment